இத்தனை கொண்டாட்டங்களுக்கு நடுவில் சமூக இடைவெளி தாக்குப் பிடிக்குமா??? பதற வைக்கும் புகைப்படங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் இந்த மாதம் அக்டோபர் முதல் வரும் டிசம்பர் வரை தசரா, தீபாவளி, துர்கா பூசை, நவராத்திரி, கிறிஸ்துமஸ் எனக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு விழாக்கள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்த விழாக்களைக் கொண்டாடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப் படுமா என்பதே தற்போது பெரும் கேள்விக்குரியாக இருக்கிறது.
காரணம் கொண்டாட்டங்கள் என்றாலே இந்தியாவில் கூட்ட நெரிசல், வழிபாடு, பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாமே நிறைந்து இருக்கும். இந்நிலையில் மேற்கு வங்க மக்கள் துர்கா பூஜை விமர்சையாகக் கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாகச் சில புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி இருக்கிறது. துர்கா பூசை என்பது இந்தியா முழுவதும் கொண்டாட்ப்படும் பண்டிகையாக இருந்தாலும் மேற்கு வங்கத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தவிர ஒடிசா, அசாம், பீகார் போன்ற பகுதிகளிலும் இந்த விழா சிறப்பு பெற்ற பண்டிகையாக திகழ்கிறது.
துர்கா பூஜையின்போது பராசக்தியின் வடிவமான துர்கை அம்மனை சிறப்பாக அலங்கரித்து மக்கள் ஒன்றாக கூடி வழிபாடு நடத்துவர். சில இடங்களில் மகிஷாசுரனை வென்றதாகக் கொண்டாடப்படும் தசரா விழாக்களில் அரக்கனின் தலையை அம்மன் வெட்டுவது போன்ற சடங்குகள் நடத்தப்படும். இந்தச் சடங்குகளின்போது மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது என்ற அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்படும்.
தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தகைய விழாக்கள் எப்படி நடைபெறும், இந்த விழாக்களின்போது மக்களைக் கட்டுப்படுத்த முடியுமா, சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப் படுமா என்ற பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தசரா விழாக்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout