அமெரிக்காவில் மனிதர்கள்மீது பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலவரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல ஆய்வு நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கிவருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை அமெரிக்காவின் மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம் தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதனை செய்திருக்கிறது. சீனாவின் ஆய்வு மருந்தகங்கள் எலிகளின் மீது பரிசோதனை செய்திருக்கின்றன. இதைத்தவிர புதிய ஆய்வுகளைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
பொதுவாக மலேரியா, தட்டம்மை போன்ற வைரஸ் நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் பலவீனமடைந்த அதே வைரஸ்களிலிருந்துதான் இதுவரை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனாவிற்கு மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பூசி (mRNA-1273) என்ற மருந்தானது அப்படி உருவாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக விஞ்ஞானிகள் கொரோனா நாவல் வைரஸை உருவாக்கி அதன் மரபணு குறியீட்டைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தடுப்பூசி கொரோனா வைரஸ் கிருமிகளை தாக்கி அளிக்கும் அளவிற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் ஆற்றல் பெற்றது என அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
உயிரி தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு முயற்சி செய்யப்பட்ட வழிமுறைகளைத் தான் பின்பற்றிவருகிறது. இந்த வழிமுறையைப் பொறுத்தவரை மிகவும் வேகமான நடவடிக்கையாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உயர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது எனவும் இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிறுவனம் தயாரித்துள்ள mRNA-1273 தடுப்பூசியானது இதுவரை நான்கு பேர் மீது நேரடியாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு பெண்மணியும் அடக்கம். இது முதல்கட்ட பரிசோதனை மட்டுமே என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஒரு முறை தடுப்பூசி செலுத்திய பிறகு அடுத்த 28 கழித்து, அடுத்த தடுப்பூசி செலுத்தப்படும். அதுவும் ஒரே நாளில் இரு முறை தடுப்பூசி அவர்களின் கைகளின் உள்ள தசைகளில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தன்னார்வலர்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். முதல்கட்ட பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில் அடுத்த 18 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது. இந்தச் சோதனைக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதாரத் துறை நிதி வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments