தோனிக்கு அவுட் கொடுத்ததால் கதறி அழுது நடுவரை திட்டி தீர்த்த சிறுவன் செய்த நெகிழ்ச்சியான செயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 12ஆம் தேதி, ஹைதராபாத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதினர்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் நான்காவது கோப்பையை நழுவ விட்டது. அதைப்போல், தோனி ரன் அவுட் ஆனார். தேனியின் ரன் அவுட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் மூன்றாவது நடுவர் தோனிக்கு ரன் அவுட் வழங்கினார்.
இதனால் தோனியின் மேல் உள்ள பாசத்தில், மூன்றாவது நடுவரை, அழுத்த படியே... தூக்கில் தொங்கி விடுவார் என சென்னைய சேர்ந்த சிறுவன் ஒருவன் திட்டிய வீடியோ வைரலாக பரவியது. இந்த செயலுக்கு சிறுவன் கிருதிகேஷ், மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது... தோனியின் மேல் உள்ள பாசத்தால் உணர்ச்சிவசப்பட்டு அப்படி திட்டி விட்டேன், தற்போது நான் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், மூன்றாவது நடுவரை திட்டியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
தோனி என் வீட்டுக்கு வந்தால், காலைத் தொட்டு கும்பிடுவேன் என்றும், அவரை நேரில் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவேன், தோனி அவர் வீட்டுக்கு கூப்பிட்டால் இம்ரான் தாகிர் போன்று ஓடியே சென்றுவிடுவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
title: தோனிக்கு அவுட் கொடுத்ததால் கதறி அழுது நடுவரை திட்டி தீர்த்த சிறுவன் செய்த நெகிழ்ச்சியான செயல்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments