காதலிக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ரொனால்டோ… வியப்பில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் நெம்பர் ஒன் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியின் 28 ஆவது பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் விமர்சையாகக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உலகின் நெம்பர் ஒன் கால்பந்து வீரராக வலம்வரும் இவருக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் 36 வயதான இவர் 5 முறை பாலன் டி ஓர் விருதை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிறிஸ்டியானோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் பிறந்தநாளுக்காக துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா டவரில் ‘3டி‘ விளக்குகளில் 3 நிமிட வீடியோ ஒளிரச்செய்து கொண்டாடியுள்ளார். பிரமிப்பூட்டும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ரொனால்டோ-ஜார்ஜினா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரமிப்பூட்டும் கோபுரங்களில் ஒன்றான புர்ஜ் கலிஃபாவில் ஒரு 3 நிமிட வீடியோவை ஒளிரச்செய்வதற்கு 50 ஆயிரம் டாலர்கள் செலவாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின்போது ரொனால்டோ- ஜார்ஜினா தம்பதிகளின் குழந்தைகளும் உடனிருந்தனர். முன்னாள் காதலி மூலமாக ரொனால்டோவிற்கு ஜுனியர் ரொனால்டோ இருக்கும்போது ஜார்ஜினா மூலமாக Eva- Mateo என்ற இரட்டை குழந்தைகளும், Alana Martina என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர். மேலும் கடந்த அக்டோபரில் மேலும் இரட்டை குழந்தைகளை வரவேற்க உள்ளதாக இந்த ஜோடி அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
How did you find Ronaldo's birthday present? ?? #Cristiano #CristianoRonaldo #Ronaldo #CR7 #GeorginaRodriguez pic.twitter.com/G3qsYLdxaE
— Football is Life (@FootballisL_ife) January 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments