இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: எப்பதா பயன்பாட்டுக்கு வரும்??? நாடாளுமன்றத்தின் புது அப்டேட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என்ற தகவல் கடந்த சில தினங்களாக இந்திய மக்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 க்குள் கொரோனா தடுப்பூசி என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. கிளினிக்கல் பரிசோதனைக்கே இன்னும் முழுமையாக தயாராகாத தடுப்பூசி, எப்படி அனைத்து பரிசோதனைகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும், இந்த விஷயத்தில் மத்திய அரசு மனித உயிர்களோடு விளையாடுகிறதா எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பில்லை. 2021 இல் பொது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்ற தகவலை நிலைக்குழுவின் தலைவர் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட பின்பு முதன் முதலாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டிற்குள் தயாரிப்பது கடினம் எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இக்கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர், உயிரி தொழில்நுட்பத் தலைவர், CSIR இயக்குநர், அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் போன்றோரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கழகத்தின் (ICMR) இயக்குநர் பல்ராம் பார்கவா, பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, இந்தியா கொரோனா தாக்கத்தால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கிளினிக்கல் பரிசோதனைக்கு ஒப்புதல் பெற்றப்பட்டுள்ளன கோவேக்சின் தடுப்பூசியை விரைவாக கிளினிக்கல் பரிசோதனைக்கு உட்படுத்தி, வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறத்தி இருந்தார். இந்தத் தகவலை எடுத்துக் காட்டி நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு விளக்கம் அளித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசு அறிவித்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வெளிவர வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தடுப்பூசி பெரும்பாலும் இந்தியாவின் சொந்த தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தாகக் கூட இருக்கலாம் எனத் தெரிவித்து உள்ளார். மேலும், குறைந்த விலையில் அதாவது 30 ஆயிரம் ரூபாயில் வென்டிலேட்டர் கருவி கண்டுபிடிக்கப் படுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments