கொரோனா தடுப்பு: உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் கியூபா??? எதனால்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து ஒரு நாடு உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது. ஏனென்றால் அதிகமாக கொரோனா பாதித்த நாடுகளுக்கு எல்லாம் தங்களது மருத்துவக் குழுவை அனுப்பி உதவிக்கரம் நீட்டுகிறது கியூபா. அதோடு தானாகவே முன்வந்து தடுப்பு மருந்துகளையும் கொடுத்து உதவி இருக்கிறது. கொரோனா பாதித்த பயணிகள் கப்பலை அமெரிக்கா முதற்கொண்டு கரிபியன் கடலையொட்டிய எந்த நாடுகளும் அனுமதிக்க மறுத்தபோது ஒரு நாடு அந்தக்கப்பலை மனிதநேய அடிப்படையில் தங்களது எல்லைக்குள் ஏற்றுக்கொண்டது. இந்த மனிதநேய மாண்பினால் தான் இன்றைக்கு உலக நாடுகள் கியூபாவைப் பற்றி பேசிவருகின்றன.
இந்நாட்டின்மீது உலகின் வல்லரசான அமெரிக்கா இதுவரை 191 பொருளாதாரத் தடைகளை விதித்து இருக்கிறது. மேலும், கியூபாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிரி நாடுகளாக பாவிக்கும் மனப்பான்மையையும் தவறாமல் கடைபிடித்து வருகிறது. இப்படி ஓடோடி உதவும் கியூபா, ஐ.நா. சபையில் பல தடவை தன்மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குமாறு கோரியிருக்கிறது??? இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதை இந்நேரத்தில் உலகம் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. அரசியலை விரும்பாத சாதாரண மனிதனும் இந்த நாட்டைப்பற்றி ஏன் இத்தனை நாட்களாக ஊடகங்கள் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறான்.
கியூபாவுடன் இதுவரை வெனிசுலா, சீனா, ஸ்பெயின் ஆகிய சில நாடுகள் மட்டுமே நட்புநாடுகளாக இருந்து வருகின்றன. சீனாவில் கொரோனா தாக்கியதில் இருந்து கியூபா பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. முக்கியமாக Cuban Interferon Alpha 2B என்ற மருந்துப்பொருளை கியூபா கொடுத்து உதவியதால், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என சீன அரசாங்கமே ஒத்துக்கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று நோய்க்கு சீனா பரிந்துரைத்த 30 மருந்துப்பொருட்களில் Interferon Alpha 2B என்பது கடைசியாக சேர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் Interferon முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருப்பதைத் தற்போது உலக நாடுகளும் ஒத்துக்கொண்டிருக்கின்றன.
கியூப மருத்துவ விஞ்ஞானிகள் இந்த Cuban Interferon Alpha 2B மருந்துப்பொருளை 1981 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அந்நாட்டில் ஏற்பட்ட கடுமையான பிளேக் நோயை இந்தத் தடுப்பு மருந்தினால் முற்றிலும் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த மருந்தில் உள்ள Interferon என்பது பிளேக், புற்றுநோய், சார்ஸ், மெர்ஸ் என்று இதுவரை அனைத்து நோய்களுக்கும் தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துப்பொருளை லத்தின் அமெரிக்கா, வெனிசுலா, பனாமா போன்ற நாடுகள் கியூபாவிடம் இருந்து இறக்குமதி செய்துகொள்கின்றன.
Interferon என்பது வைரஸ் கிருமிகளிடம் உள்ள புரதப்பொருளைத் தாக்கி அழிக்கும் வல்லமைக் கொண்டது. எனவே உடலில் பரவும் வைரஸ் தொற்றுகளில் இருக்கும் புரதத்தை அழிப்பதன் மூலம் ஒரு செல்லில் இருந்து மற்ற செல்களுக்குப் பரவாமல் பார்த்துக்கொள்ள இந்த மருந்து முக்கியத்துவமுடைய ஒன்றாகக் கருதப்படுகிறது.
Cuban Interferon Alpha 2B மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவக்குழுவின் ஒருவரான Luis Herrera கொரோனாவுக்கு இந்தத் தடுப்பு மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மனித ஆரோக்கியம் ஒரு வணிகச் சொத்து அல்ல, அடிப்படை உரிமை என்பதை உலகம் புரிந்து கொள்ள தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” எனவும் தெரிவித்து இருக்கிறார்.
கியூபா, கம்யூனிச நாடு என்பதால் அந்நாட்டில் அனைத்து சொத்துக்களும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு இருக்கின்றன. எனவே மருத்துவத்தை மனிதர்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் கியூபா அக்கறை காட்டி வருகிறது. அந்நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரனுக்கும் ஒரேமாதிரியாகவே மருத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும், மருத்துவத்தை ஒருபோதும் லாபகராமான தொழிலாக கியூபா பார்ப்பதும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
உலகில் இருக்கும் உயர்ந்த மருத்துவர்களில் பாதிபேர் கியூபாவில் தான் இருக்கிறார்கள். கியூபா மருத்துவக் கண்டுபிடிப்பிலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளிலும் முதன்மையான நாடாகத் திகழ்ந்து வருகிறது என்றாலும் அந்நாடு மருத்துவத்தில் அதிக வருவாயைப் பெறுவதில்லை. பதிலாக ரம், புகையிலைப்பொருட்களில் தான் கியூபா அதிக வருமானத்தைச் சம்பாதித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு ரிச்சர்ட் ஜே ரோசர்ஸ் கியூபாவின் மருத்துவத்துறையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஒருகாலத்தில் உலக சுகாதார நிறுவனமும் கியூபாவின் மருத்துவ முன்னேற்றங்களைப் பார்த்து வியப்படைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தககது.
தற்போது, 52 பேர் அடங்கிய மருத்துவக்குழுவை இத்தாலிக்கு அனுப்பியுள்ளது க்யூபா. கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் இணைந்து அந்நாட்டின்மீது பொருளாதார தடையை விதித்த இத்தாலிக்குத் தானாக முன்வந்து உதவிபுரிந்துவரும் க்யூபா அரசாங்கத்திற்கு தற்போது உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கூடவே Cuban Interferon Alpha 2B மருந்துவப் பொருளும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அரசியல் காரணங்களையெல்லாம் தள்ளிவைத்து விட்டு கியூபா செய்துவரும் இத்தகைய முயற்சிகளால் தற்போது பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
Cuban Interferon Alpha 2B
2014 – 2016 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவியபோது உலகெங்கிலும் சுகாதார நெருக்கடி நிலவியது. ஆனால் கியூபா அனைத்து நாடுகளுக்கும் தனது மருத்துவர்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியது. எபோலா வைரஸ்க்கு எதிராகவும் Interferon தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்தது.
கடந்த காலங்களில் பரவியல் SARS –CoV வைரஸ்க்கு எதிராகவும் Interferon பயன்படுத்தப் பட்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டது கியூபா. மேலும், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற வைரஸ்தொற்றுக்கும் உலகளவிலும் இந்த Interferon தேவைப்படும் ஒரு மருந்தாக இருந்துவருகிறது.
2003-2004 ஆம் ஆண்டுகளில் புற்றுநோய் கட்டிகளை குறைப்பதற்கான மருந்துப்பொருளையும் கியூபா கண்டுபிடித்தது. இந்த மருந்தை நேடியாகப் பெறமுடியாத அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளின் வழியாக சென்று சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பிரிட்டன் கப்பல்
மார்ச் மாதத்தின் துவக்கத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான எம்.எஸ். ப்ரீமர் கப்பல் 682 பயணிகள் மற்றும் 381 பணியாளர்களுடன் கரீபியன் கடலில் பயணத்தை மேற்கொண்டிருந்தது. அப்போது கொரோனா நோய்த்தொற்றினால் 5 பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தவுடன் கப்பல் தரையிறக்குவதற்கு பல நாடுகள் மறுப்பு தெரிவித்துவிட்டன. உலகில் வல்லரசான அமெரிக்காவிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் பிரச்சனையை சமாளிக்க முடியாது என அதிபர் மறுத்துவிட்டார்.
அனைத்துக் கரிபியன் நாடுகளும் ப்ரிமியர் கப்பலை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது க்யூபா தனது பஹாமஸ் தீவு துறைமுகத்தில் கப்பலை நங்கூரமிடுமாறு அழைத்து ஏற்றுக்கொண்டது. மேலும், அனைத்து பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் பாதிப்பு ஏற்பட்ட 5 பேர் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்தொற்று இல்லாத மற்ற பயணிகள் பிரிட்டன் விமானத்தில் பத்திரமாக அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தகக்து.
தற்போது தமிழகம் முதற்கொண்டு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அரசின் பணியாளர்கள் மட்டுமே தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி வருகிறார்கள். சாதாரண துப்புரவு தொழிலாளர்கள் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவர்கள், செவிலியர்கள் என ஒரு நாட்டில் அரசு மட்டுமே மக்களைக் காப்பாற்றும் சக்தியாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஒருபோதும் சேவைக்காக இருக்காது என்பதையும் இந்த கொரோனா எடுத்துக்காட்டியிருக்கிறது.
இதன்மூலம் அரசாங்கத்தின் சேவை குணம் எவ்வளவு வலிமையானது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல் காரணங்களுக்காக ஒருநாட்டின் நல்லுறவை தள்ளிவைக்கக்கூடாது என்பதைத் தற்போது உலக நாடுகளுக்கு கியூபா உணர்த்தி இருக்கிறது. மேலும், மருத்துவத்தை மனித ஆரோக்கியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது. கியூபாவின் மனிதநேய மாண்பு அனைத்து உலக நாடுகளும் பின்பற்றவேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments