கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மூன்றாவது உயிர் பலி!!!

  • IndiaGlitz, [Tuesday,March 17 2020]

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு மும்பை கஸ்தூரிபா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து இருக்கிறது.
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,164 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 182,723 பேருக்கு உலகம் முழுக்க தொற்று இருப்பதாகவும் கணிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் 157 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பினைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மார்ச் 18 முதல், மார்ச் 31 வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைத் தொடர்பு வசதிகளை இந்திய சுகாதாரத் துறை நிறுவனம் அறிமுகப் படுத்தி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாநிலங்களாக தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. கொரோனா அச்சத்தால் இந்திய வர்த்தகத் துறை கடும் சரிவை சந்தித்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் மார்ச் 11 அன்று கர்நாடகாவில் 76 வயதான முதியவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். அவர் சவுதி அரேபியாவுக்கு ஒரு மாதகாலம் யாத்திரை சென்று திரும்பியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கர்நாடகா கலாபுரகியை சேர்ந்த முதியவரின் குடும்பத்தில் மேலும், 4 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப் பட்டு ஞாயிற்று கிழமை அன்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

பின்பு, மார்ச் 13 ஆம் தேதி டெல்லியில் 69 வயதான பெண் ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இன்று (மார்ச் 17) மும்பையில் 64 வயதான முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

கொரோனா பீதியால் தென்னந்தோப்புக்கு மாறிய ஐடி அலுவலகம்: சுவாரஸ்ய தகவல் 

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமெங்கும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பீதி: முட்டை விலை படுவீழ்ச்சி

இந்தியா உள்பட உலகின் 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்

லாட்ஜில் தங்கிய காதலர்களை மிரட்டிய போலீஸ் பணி  நீக்கம் 

புதுச்சேரியில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மருமகனுடன் கள்ளத்தொடர்பு: இடையூறாக இருந்த மகனை கொலை செய்த மாமியார்

மருமகனோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த மாமியார் ஒருவர் இந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தனது மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு பிரபல நடிகர் பாராட்டு

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.