மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!
- IndiaGlitz, [Friday,March 20 2020]
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். 95 வயதான அவர் அண்மையில் பண்டார் குச்சிங் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் கெல்வின் ஈ லீ வுயெனை சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், மருத்துவர் கெல்வின் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தன் பேஃஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, முன்னாள் பிரதமர் மகாதீர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதாக அறிவித்து உள்ளார்.
“தனிமைப் படுத்திக் கொள்ளும்போது முக்கியமான கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இயலும். அதனால் தான் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நான் வெளியில் செல்லவோ பொது மக்களை சந்திக்கவோ கூடாது. நான் மற்றவர்களுடனும் பிறர் என்னுடனும் கைகுலுக்க இயலாது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கு கடுமையானதாக இல்லை” எனத் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நோய் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், 75 உயரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் பிரதமர் முகிதீன் யாசின் மக்களுக்கு கடுமையான உத்தரவுகளை விதித்து இருக்கிறார்.
மலேசியா, கோலாலாம்பூரில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. புரூனோவை சேர்ந்த ஒருவர் வைரஸ் தொற்றுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அவர் மூலமாக பலருக்கு பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விழாவில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் 4,000 பேரை அடையாளம் காண முடியிவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களை தாங்களாகவே வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களில் 2 ஆயிரம் பேர் ரோஹியங்கா அகதிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மலோசியாவில் தற்போது பொது நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. பொது மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்து வராவிட்டால் ராணுவம் களமிறக்கப் படும் என மலேசிய அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.