விவிஐபிக்களுக்கும் கொரோனா!!! இதுவரை பாதிக்கப் பட்ட உலகப் பிரபலங்கள்

கொரோனா வைரஸ் பரவிய தருணத்தில் இருந்தே சமூக ஊடகங்களும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கொரோனா பற்றிய அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் தனக்கு பிடித்த நடிகர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அடிப்படையில் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப் பட்ட பிரபலங்கள் பற்றி சிறு தொகுப்பு. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் இதுவரை 4,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 75 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா அடிப்படையில் ஒரு தொற்று நோய். ஏழையானால் என்ன? விவிஐபி ஆனால் என்ன? பாரபட்சம் இல்லாமல் சகட்டு மேனிக்கு தனது திருவிளையாடலை காட்டி வருகிறது கொரோனா. உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

பிரிட்டன்

பிரிட்டன், சுகாதார துறை அமைச்சர் நாடின் டோரிஸ் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதென்று இரு தினங்களுக்கு முன்பு அவரே உறுதி செய்தார். மார்ச் 8 ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதற்கு பின்பே கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டது. எனவே அமைச்சர் டோரிஸ் சந்தித்த நபர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப் பட வேண்டும் என்ற கட்டாயம் அந்நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டது. மேலும், நாடாளுமன்ற நடைமுறைகளில் டோரிஸ் கலந்து கொண்டிருந்தார். எனவே பெரும் எண்ணிக்கையிலான பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.  

ஈரான் பிரபலங்கள் 

சீனாவிற்கு அடுத்து ஈரானில் கொரோனா அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டேகருக்கு கொரோனா இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப் பட்டது.

மேலும், ஈரானின் சுகாதாரத்துறை துணை மந்திரி மற்றும் கொரோனா வைரஸ்க்கு எதிரான திட்ட அமைப்பின் தலைவரான இராஜ் ஹரீர்சியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மேலும், ஈரானின் வாடிகன் மற்றும் எகிப்துக்கான முன்னாள் தூதர் ஹாதி கோஸ்ரோஷாஹிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப் பட்டது. 

மேலும், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. உலக அளவில் ஈரானில் தான் அதிக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

கனடா

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகேயருக்கும் கொரோனா இருப்பதை நேற்று பிரதமர் உறுதி செய்தார். இது குறித்து தன் மனைவி தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். 

கால்பந்து பிரபலங்கள் 

இத்தாலியில் தற்போது கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் Juvantus அணியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த அணி முழுவதும் தனிமைப் படுத்தப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Juvantus அணியின் டேனியல் ருகானிக்கு கொரோனா இருப்பதாகவும் தற்போது உறுதிப் படுத்தப் பட்டு இருக்கிறது. மேலும், Cristiano Ronaldo, Paulo Dybala ஆகிய இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்து இருக்கிறது. இன்னொரு கால்பந்து அணியான அர்செனல் அணியின் மேலாளர் ஆர்டெட்டா வுக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. 

கால்பந்து வீரர்களுக்கு கொரோனா என்ற செய்தி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஹாலிவுட் பிரபலம் 

பிரபல ஹாலிவுட் நடிகர் Tam Hanks மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா இருப்பதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் தங்களை ஆஸ்திரேலியாவில் தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும் தங்களைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து தெரிவிக்கப் போவதாகவும் பதிவிட்டு இருந்தார். 

ஸ்பெயின் Equality அமைச்சர் Montero க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. அமைச்சர் Montero க்கு கொரோனா தொற்று இருப்பதால் அவருடன் தொடர்புடைய மற்ற உயர் அதிகாரிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன்  கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டு இருப்பது தற்போது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.  முதலில் தொண்டை புண் இருப்பதாகக் கூறிய ரிச்சட்சனுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்த சோதனை செய்யப் பட்டது. சோதனையில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.