கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!

  • IndiaGlitz, [Sunday,March 22 2020]


கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்நாட்டில் இதுவரை 25,493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், 7 பேருக்கு நோய் தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நியூ ஜெர்சியில் வாழும் ஒரு குடும்பம் சமீபத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்கும்படியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ மற்றும் அவரது ஆறு பிள்ளைகளின் குடும்பங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்த மூதாட்டி கிரேஸ் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரையடுத்து அதே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும், குடும்பத்தில் உள்ள மற்ற 20 பேரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பதைக் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது.

தனிமை அறையில் மணிரத்னம் மகன்: வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை

ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நீக்கியது ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிக்க கோரியும்

ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே

சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தெருவில் நடந்த திருமணம்

இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல்