என் குழந்தையை எப்படியாவது காப்பாத்துங்க! பெண் எம்பியிடம் கதறியழுத தாய்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க கடந்த 24 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். குழந்தை கிணற்றில் விழுந்து 24 மணி நேரம் ஆகிவிட்டதால் உணவு மற்றும் தண்ணீர் இன்றி இருக்கும் நிலையில் ஆக்சிஜனை மட்டும் மீட்புக்குழுவினர் செலுத்தி வருகின்றனர். எப்படியும் குழந்தையை உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் போராடி வருகின்றனர்
இந்த நிலையில் குழந்தையின் தாய்க்கு ஆறுதல் சொல்ல காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் மீட்பு பணி நடக்கும் இடத்திற்கு நேரில் சென்றார். சுர்ஜித்தின் தாயார் மேரிக்கு அவர் நேரில் ஆறுதல் கூறியபோது மேரி கதறியபடி ’என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க அதற்கு ஜோதிமணி எம்பி ’நிச்சயம் குழந்தை மீட்கப்படும் கவலைப்பட வேண்டாம்’ என்று ஆறுதல் கூறியுள்ளார்
இதனையடுத்து ஜோதிமணி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கனத்த இதயத்துடன் நின்று கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments