வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அவர்கள் இந்த படத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட அனுபவம், சிவகார்த்திகேயனின் கேரக்டர் உள்பட ஒருசில விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
"சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குனர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் ஒரு வித தியான நிலையில் இருப்பது போல வலம் வருவார்கள். அதற்கு காரணம் காலை 4 மணி வரை எடுக்க வேண்டிய காட்சிகளை விவாதித்து விட்டு, மீண்டும் 8 மணிக்கு படப்பிடிப்புக்கு ஆஜராகி விடுவார்கள்" என்றார்.
இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார், அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்"
கலை இயக்குனர் முத்துராஜ் சின்ன சின்ன நுட்பமான விஷயங்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். குடிசை பகுதிகளில் நிறைய முருங்கை மரங்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். செட்டில் நம்பக தன்மைக்காக அவற்றை வளர்க்க எந்த தயக்கமும் காட்டாமல் உழைத்தார். அது போலவே கூவத்தை நிஜமாக காட்ட நிறைய குப்பைகளையும், இரும்பு பைப்புகளையும் கொண்டு வந்து தன் வேலையை இன்னும் சிறப்பாக செய்தார்.
தயாரிப்பாளர் ராஜாவின் மேன்மையை ஒரு சில வார்த்தைகளில் சாதாரணமாக கூறி விட முடியாது. அவரது நற்குணங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்களை பரப்பும். நிறைய செலவு செய்து எடுத்து விட்டோமே என்பதற்காக, கதையின் ஓட்டத்துக்கு தடையாக இருக்கும் காட்சிகளை நீக்குவதற்கு கூட அவர் தயங்கியதே இல்லை.
இவ்வாறு ஒளிப்பதிவாளர் ராம்ஜி, 'வேலைக்காரன்' படம் குறித்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout