நடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ
- IndiaGlitz, [Tuesday,September 21 2021]
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து அவர் மிகவும் எளிமையான முதல்வராக உள்ளார் என்றும் மக்கள் அவரை எளிதில் சந்திக்கும் வகையில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுடன் உரையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
சென்னை அடையாறு தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார்.
முதல்வரிடம் பேசிய பொதுமக்களில் ஒருவர் முதல்வரின் பேரன் வெளிநாட்டில் கால்பந்து போட்டியில் பங்கேற்பது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் நல்ல முறையில் விளையாடி சாதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
மேலும் நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என்று நாங்கள் பலமுறை விரும்பியதாகவும் எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் முதலமைச்சராக ஆகி தற்போது சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறீர்கள் என்றும் பொதுமக்கள் அவரிடம் தெரிவித்து உள்ளனர். மேலும் 68 வயதிலும் மிகவும் இளமையாக காணப்படுகிறீர்கள் என்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ தமிழக முதல்வரின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, அடையாறு தியோசஃபிகள் சொசைட்டி வளாகத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அங்கு வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். pic.twitter.com/DauNVpWcEo
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 21, 2021