புதிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் "குரங்கு-பி" வைரஸ்…. அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துபோய் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் "குரங்கு-பி" வைரஸ் எனும் புதிய வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதையடுத்து சீன நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வசித்துவந்த கால்நடை மருத்துவர் ஒருவருக்கு "குரங்கு-பி" எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் தற்போது உயிரிழந்து இருக்கிறார். 53 வயதாகும் அந்த கால்நடை மருத்துவர் கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்தார் என்றும் இதையடுத்து கடந்த மே மாதம் முதல் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவர் கடந்த மே 27 ஆம் தேதி உயிரிழந்து விட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவரின் இறப்புக்கு காரணம் எதுவும் தெரியாத நிலையில் அவருடைய சளி மற்றும் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இதையடுத்து உயிரிழந்த மருத்துவருக்கு "குரங்கு-பி" எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவில் கடந்த 1932 ஆம் வருடத்தில் மகாக்கஸ் எனும் குரங்கு வகைகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்தான் குரங்கு-பி என்பது. ஆனால் இந்த வைரஸ்களினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவர் ஒருவர் இந்த வைரஸ்க்கு பலியாகி உள்ளனர்.
அறிகுறிகள்-
குரங்கு-பி எனும் வைரஸ் 70-80% அளவிற்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இந்த வைரஸ் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது 1-3 வாரங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்புமண்டலப் பாதிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். மேலும் பாதிப்பை ஏற்படுத்திய நபரின் மத்திய நரம்பு மண்டலப் பகுதிகளில் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி விரைவில் இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குரங்குகளின் நேரடி கழிவுகள் மற்றும் அதன் சுரப்பிகளில் இருந்து இந்த வைரஸ் நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் குரங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், பூங்கா ஊழியர்கள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் குரங்குகளிடம் நெருங்கி இருக்க வேண்டாம் என்றும் அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com