பெண்களை அடுத்து திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணமா? முதல்வர் டுவிட்
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று அதிகாலை முதல் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் என்பதும் அவர்கள் முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் கூறியதாவது:
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.
— M.K.Stalin (@mkstalin) May 8, 2021
தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும். https://t.co/NSxVBP6nzJ