சென்னைக்கு அங்கீகாரம் அளித்த ஐநாவின் யுனெஸ்கோ: பிரதமர் மோடி வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐநா என்று கூறப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கம் யுனெஸ்கோ அமைப்பு. இந்த அமைப்பு கிரியேட்டிங் சிட்டீஸ் (Creative Cities) என்ற அங்கீகாரத்தை உலகின் சிறந்த நகரங்களுக்கு அளித்து வருகிறது. கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் இந்த கிரியேட்டிங் சிட்டீஸ் பட்டியலில் இடம்பெறும்
இந்த நிலையில் பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் முக்கியத்தை கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையை இந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது. இந்த அங்கீகாரம் சென்னைக்கு கிடைத்ததை அடுத்து சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில் ' ‘பாரம்பர்ய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்' என்று கூறியுள்ளார்.
சென்னை மட்டுமின்றி ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட இந்திய நகரங்கள் உள்பட உலகின் 64 நகரங்கள் இந்த கிரியேட்டிவ் சிட்டிஸ் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout