2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களும் தற்போது நிவர் புயலின் காரணமாக விரைந்து நிரம்பி வருகிறது. அதில் செம்பரபாக்கத்தின் மொத்த கொள்ளளவு 24 அடி. நேற்று மதியமே 22 அடி நீர்மட்டம் நிறைந்ததால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது. ஒருவேளை இன்று அதன் முழு கொள்ளளவும் எட்டும் பட்சத்தில், இன்று இரவு நீர்த்தேக்கத்தில் இருந்து அதன் உபரி நீர் திறந்து விடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியமே அதன் உபரி நீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உபரிநீர் திறப்பு குறித்து தாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால்தான் அத்தனை பெரிய சேதம் ஏற்பட்டது. தற்போது உபரி நீரைத் தேக்கி வைக்காமல் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித் துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரபாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து சரியான நிர்வாக முடிவு எடுக்கப்படாமல் அடையாறு ஆற்றின் நீர் அளவு உயர்ந்து ஒட்டுமொத்த சென்னையே வெள்ளக்காடாக மாறியது. அதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பொதுப்பணித் துறை மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.

இன்று மதியம் 12 மணிக்கு செம்பரபாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்பதால் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றின் வழியாக நீர் வந்து அப்படியே அது கடலில் கலக்கும்.

மேலும் செம்பரபாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செம்பரபாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

திறக்கப்படுகிறது செம்பரப்பாக்கம் ஏரி: 2015 திரும்புமா?

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு: நிவர் குறித்து கவிப்பேரரசு கவிதை!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கால் சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் சம்யுக்தா காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சனம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறிய சம்யுக்தா, 'வளர்ப்பு சரியில்லை'

டாஸ்க்கில் விட்டுக்கொடுத்த கேபி: பாலாஜி சொன்னது உண்மைதானா ?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் குரூப்பில் சோமசேகர், ரியோ மற்றும் கேபி இருப்பதாக நேற்று பாலாஜி சொன்னதை இன்றைய டாஸ்க்கில் கேபி மற்றும் சோம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் 

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது