டீ கடையில் நின்று தம் அடிக்கும் சிறுவர்களே உஷார்… எச்சரிக்கும் புது சட்டம்!!!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை மத்திய அரசு அதிரடியாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மசோதாவில் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்களில் நின்று புகைப்பிடிப்பவர்களுக்கான அபராதம் ரூ.200 இல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 இல் இருந்து 21 ஆக உயருகிறது. இதுதொடர்பாக புதிய மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தயார் செய்து இருக்கிறது. இதில் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு யாரும் சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களை விற்கவோ வாங்கவோ கூடாது. மேலும் கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் குறைந்தது 100 மீட்டருக்கு அப்பால் தான் புகையிலைப் பொருட்களை விற்கவும் அனுமதிக்கப்படும் .
மேலும் இதுபோன்ற பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்துதான் விறக் வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதனால் சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி செயல்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் இதே தவறை செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்தால் விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.