செல்போன் கடையை உடைத்து தானாகவே எக்சேஞ்ச் செய்த திருடன்: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து ஒரே ஒரு போனை மட்டும் திருடி, அதற்கு பதிலாக தன்னுடைய பழைய போனை செல்போன் கடையில் வைத்து விட்டு தானாகவே எக்சேஞ்ச் செய்த திருடன் ஒருவன் குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனது வீட்டின் அருகிலேயே ஒரு செல்போன் கடை வைத்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் திடீரென தனது கடையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜானகிராமன், உடனடியாக கடையை நோக்கி வந்தார்

அப்போது ஜானகிராமனை பார்த்த திருடன் உடனடியாக அவசர அவசரமாக கடையை விட்டு வெளியேறி தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் கடைக்குள் சென்று பார்த்த ஜானகிராமன் கல்லாப்பெட்டி உள்பட எந்த பொருளும் திருடு போகவில்லை என்பதையும், ஒரே ஒரு செல்போனை மட்டுமே திருடன் திருடிச்சென்றதும், அதுமட்டுமின்றி அந்த திருடன் தனது பழைய போனை அங்கேயே வைத்து விட்டுச் சென்றுள்ளதும் தெரிய வந்தது.

இதிலிருந்து தனது பழைய போனை அங்கே வைத்துவிட்டு ஒரே ஒரு புதிய போனை மட்டும் அந்த திருடன் எக்சேஞ்ச் செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். அங்கு உள்ள சிசிடிவி கேமராவை காட்சியின் உதவியால் திருடனை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஜானகிராமனை பார்த்ததும் திருடும் எண்ணத்தை திருடன் கைவிட்டு இருக்கலாம் என்றும், அவ்வாறு தப்பி செல்லும்போது தனது பழைய போனை ஞாபகமறதியால் விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தத்தில் தானாகவே செய்து செய்து கொண்டு போன திருடன் குறித்து செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது