பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது!!! மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத்தை சரிசெய்யவே முடியாது என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டுமக்களிடையே வருத்தைத் ஏற்படுத்தி இருக்கிறது.

54 வயதான நிதியமைச்சர் தாமஸ் ஸ்காபர் தனது மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எப்படி சரிசெய்வது என்ற ஆலோசனைகளில் சில வாரங்கள் ஈடுபட்டார் என்றும் இந்த வாரத்தில் அதுபற்றிய அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. கொரோனா கொண்டுவந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கிடையில் நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்ற வருத்தத்தில் இருந்த நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரயில்வே தண்டவளாத்தில் காயங்களுடன் இருந்த உடலைப்பார்த்த மருத்துப் பிரதிநிதி ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அது மாநில நிதியமைச்சர் தாமஸ் என்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நிதியமைச்சர் தாமஸ் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்று, கொரோனா பாதிப்பு மாநிலத்தின் நிதிச்சூழல், நிதிநிலை, தொழில் ஆகியவைகளை கடுமையாக பாதித்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறது.

ஜெர்மனில் ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் தாமஸ் மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவியை அடைவதற்கு தகுதியானவராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு நற்பணியை ஆற்றிவந்த நிதியமைச்சர் தாமஸின் இறப்புக்கு அம்மாநில மக்கள் கடும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்

உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது 

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்? கமல்ஹாசனின் கொரோனா கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,

வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

உங்கள் வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன் தயவுசெய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்