இந்திய விவசாயிகளின் போராட்டம்- பிரிட்டிஷ் பார்லிமெண்டில் விவாதிக்க கோரும் எம்.பி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டன் நாட்டு பார்லிமெண்டில் இடம் பிடித்த எம்.பி ஒருவர் இந்திய விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்து பிரிட்டிஷ் பார்லிமெண்டில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தன்மஞ்சீர் சிங் தேசி பிரிட்டிஷ் நாட்டின் தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். இவர் பிரிட்டிஷ் நாட்டு பார்லிமெண்டில் செயல்பட்டாலும் இந்திய கலாச்சாரத்தை மறக்காமல் இன்றும் தலையில் தலைப்பாகை அணிந்து வலம் வருகிறார். மேலும் இந்தியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் சிக்கல்களைக் குறித்து அவ்வபோது பிரிட்டிஷ் பார்லிமெண்டிலும் பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரிட்டிஷ் பார்லிமெண்டின் வணிகம் குறித்த கேள்வி நேரத்தின்போது இந்திய விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தனது சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தன்மஞ்சீர் வெளியிட்டு உள்ள வீடியோவில், “விவசாயிகளின் அமைதிப் போராட்டம் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பூவுலகின் மிகப் பெரிய போராட்டம். இதுபெரும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. விவசாயிகளை பாதுகாப்பது குறித்து நாம் விவாதம் வைக்க வேண்டும் என்றார். மேலும் பத்திரிக்கையாளர் கைது, அமைதியாக போராடுபவர்களை கைது செய்தல், நோதீப் கவுர் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்வது, அவர் மீது பாலியல் தாக்குதல் நடந்ததகாவும் செய்திகள் வருகின்றன. ஆகவே அவைத்தலைவர் விரைவில் இதுதொடர்பாக விவாதம் ஒன்றை நடத்துவாரா” என கேள்வியுடன் தனது கோரிக்கையை தன்மஞ்சீர் முன்வைத்துள்ளார்.
கடந்த நவம்பரில் புதிய வேளாண் சட்டத்திருத்ததிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய இந்திய விவசாயிகள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் விவாதிக்க வேண்டும் என தன்மஞ்சீர் வைத்த கோரிக்கை வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த அந்நாட்டு எம்.பி ரீஸ் மாக், இந்தியாவில் நடக்கும் போராட்டத்தை பிரிட்டிஷ் கண்காணிக்கும் என்று நம்பிக்கை அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Over 100,000, incredibly from all 650 #UK constituencies (inc 3K+ from Slough), signed online petition;
— Tanmanjeet Singh Dhesi MP (@TanDhesi) February 11, 2021
adding to 100+ MPs who wrote to PM.
Given arrests of journalists and activists like #NodeepKaur, need Parliament debate ASAP on #FarmersProtest -largest protest on the planet. pic.twitter.com/E88c1pHqdw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments