ஆபாசப் படம் பார்த்த சிறுவனை நாடு கடத்திய அதிபர்! தொடரும் அதிரடி!
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
உலகிலேயே மர்மதேசமாக அறியப்படும் வடகொரியாவில் ஒரு சிறுவன் ஆபாசப் படம் பார்த்ததற்காக அச்சிறுவனின் ஒட்டுமொத்த குடும்பத்தையே நாடு கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அச்சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தண்டனை வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் அரசு ஊடகங்கள் தவிர வேறெந்த ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது. அதோடு இணையவசதி உள்ளிட்ட பலவற்றிற்கும் அந்நாட்டில் கடும் கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. இந்த விதிகளை மீறுவோர் மீது மரணத் தண்டனை வரை சாதாரணமாக விதிக்கப்பட்டு வருவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும் ஆபாசப் படம் பார்ப்பது கூட அந்நாட்டு விதிப்படி சமூக விரோதக் குற்றமாகக் கருதப்படுகிறது. இப்படி ஆபாசப் படம் பார்ப்பதை அந்நாட்டு அதிகாரிகள் ஒருவேளை கண்டுபிடித்து விட்டால் மரணத்தண்டனை என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவன் ஆபாசப் படம் பார்த்ததை அந்நாட்டு அதிகாரிகள் ஐபி ஐடியை வைத்து கண்டுபிடித்து உள்ளனர். இதனால் அச்சிறுவன் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தற்போது வடகொரியாவின் எல்லைப் பகுதியில் கொண்டு வந்து விட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அச்சிறுவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கூலி வேலை செய்யும்படி கடும் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படியொரு விசித்திர தண்டனை பார்த்த சில சமூக நல ஆர்வலர்கள் நல்லவேளை அச்சிறுனுக்கு மரணத்தண்டனை வழங்காமல் நாடு கடத்தி இருப்பது ஒருவகையில் நன்மையே என மன நிம்மதி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.