மூன்றாம் உலக போரை உருவாக்க கூடிய எந்திர மனிதன் இவனா?
- IndiaGlitz, [Monday,November 27 2017]
ரோபோ என்பது மனிதனால் தயாரிக்கப்பட்டாலும், நாளடைவில் மனிதனை விஞ்சும் அளவுக்கு திறமை படைத்ததாகவும், மனிதனையே அழிக்கும் திறமை படைத்ததாகவும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரோபோட் அதிகரிப்பால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதும் கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மனிதனை போலவே முன்பக்கமும் பின்பக்கமும் பல்டி அடிக்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோபோக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் எலான் மஸ்க் என்பவர், 'மனிதர்கள் இனி அவ்வளவுதான். ரோபோக்களின் வளர்ச்சி மனிதர்களுக்கு திகிலூட்டும் அம்சங்களை இன்னும் அதிகமாக கொடுக்கும்' என்று கூறியுள்ளார்.
மேலும் இதெல்லாம் சாதாரணம் என்ற அளவில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் ரோபோக்களின் வளர்ச்சி அபரீதமாகிவிடும் என்றும், அதை பார்க்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ரோபோக்கள் செயற்கை அறிவை பெற்று மனிதர்களை போலவே உணவு, போதை பழக்கம், விமானம் மற்றும் கார்களை இயக்குதல் ஆகியவைகளை மேற்கொள்ளும் என்றும், மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இவை மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
we dead pic.twitter.com/lUys7DptdZ
— alex medina (@mrmedina) November 16, 2017