தமிழக முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் பணிகளில் இந்திய சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த அனைத்து எம்.பிக்கள், அமைச்சர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப் பட்டது. உடல் வெப்பநிலை கண்காணிக்கப் பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே நாடாளுமன்றத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்கிறது. தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப் பட்டப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்காக சுகாதாரத் துறை மருத்துவ ஊழியர்கள் வசாலிலேயே காத்து இருக்கின்றனர்.
தமிழகச் சட்டமன்றத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com