தமிழக முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை???

  • IndiaGlitz, [Friday,March 20 2020]


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் பணிகளில் இந்திய சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த அனைத்து எம்.பிக்கள், அமைச்சர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப் பட்டது. உடல் வெப்பநிலை கண்காணிக்கப் பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே நாடாளுமன்றத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்கிறது. தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப் பட்டப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்காக சுகாதாரத் துறை மருத்துவ ஊழியர்கள் வசாலிலேயே காத்து இருக்கின்றனர்.

தமிழகச் சட்டமன்றத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
 

More News

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 245,834 பேருக்கு நோய் தொற்று இருப்ப

ரஜினியை அடுத்து தமிழக அமைச்சரை பாராட்டிய 'அண்ணாத்த' நாயகி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து விஜய் தந்தை கருத்து

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று காலை தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த தண்டனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது: