சூரியனையே விழுங்கும் Blackholes… பேரண்டத்தில் அதிசயம் நிகழ்வது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி கருந்துளைகள் (Blackholes) என்பது மிகப்பெரிய கிரகம் அல்லது நட்சத்திரங்கள் அழியும்போது அல்லது ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போது உருவாகிறது. அதாவது ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அளவு தீரும்போது அந்த நட்சத்திரம் அளவில் மிகவும் சிறியதாக சுருங்கிவிடும். இப்படி சுருங்கும் ஹைட்ரஜனின் அடுக்குகள் அடர்த்தியையும் ஈர்ப்பு விசையையும் தானாகவே ஏற்படுத்தி விடும்.
இதனால் அந்த நட்சத்திரம் கருந்துளைகளாக மாறிவிடும் என்றும் இந்தக் கருந்துளைகள் அதன் ஈர்ப்பு விசையால் அருகில் உள்ள மற்ற நட்சத்திரங்களையோ கோள்களையோ ஈர்த்துக் கொண்டு அளவில் பெரியதாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு அதன் ஈர்ப்பு விசை கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கருந்துளைகள் அதன் அளவைப் பொருத்து Stellar Blackholes, Supermassive Blackholes, Intermediate Blackholes என்று 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் சூரியனை விட 5 மடங்கு பெரியதாக உள்ள நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறும்போது Stellar வகை கருந்துளைகள் உருவாகிறது. பார்ப்பதற்கு இது ஒரு பெரிய நகரம் போன்று இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி உருவான பல கருந்துளைகள் நமது பால்வெளி மண்டலத்திலேயே சுற்றித் திரிகின்றன.
அடுத்து Supermassive இதன் அளவு சூரியனைவிட மில்லியன் அல்லது பில்லியனைக் கூட தாண்டலாம் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தவிர ஒவ்வொரு சூரியக் குடும்பமும் (நமது சூரியமண்டலத்தைப் போன்றே இந்த பால்வெளியில் பல கேலஸ்ஸிகள் உள்ளன) இதுபோன்ற Supermassive கருந்துளையைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் நமது சூரியக் குடும்பமும் 26 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Sagittarius A எனும் இடத்தில் இருக்கும் ஒரு Supermassive கருந்துளைகளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் Stellarஐ போன்று சிறியதாகவோ அல்லது Supermassiveஐ போன்று அளவில் பெரியதாகவோ இல்லாமல் இடைப்பட்ட அளவிலும் கருந்துகளைகள் காணப்படுகின்றன. அப்படி Intermediate எனப்படும் இந்தக் கருந்துளைகள் பெரும்பாலும் மிக குறைந்த இடைவெளியில் இருக்கும் நட்சத்திரங்களை ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு சங்கிலித் தொடர்போல கருந்துளைகளாக உருவாகி விடுமாம்.
ஆக இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் கோடிக்கணக்கான கேலஸ்ஸிகள் மத்தியிலும் கருந்துளைகள் மத்தியிலும் ஒரு குட்டித் துண்டு போல நமது பூமி இயங்கி வருகிறது. அதோடு நமக்கு மிக அருகில் 3 ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் ஒரு கருந்துளை இருக்கிறது. இந்தக் கருந்துளைகள் அதன் ஈர்ப்புத் தன்மையாலும் அடர்த்தியாலும் அருகில் வரும் எதையும் விழுங்கிவிடும் தன்மையைக் கொண்டு இருக்கிறது. ஏன் சில நேரங்களில் சூரியனையே இந்தக் கருந்துளைகள் விழுங்கிவிடும் என்றுகூட விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout