மலை நடுவே 30 ஆண்டுகளாக கால்வாய் தோண்டிய தனி ஒருவன்!!! சாதனை சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பீகார் மாநிலத்தில் கயா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியாக ஒரு நபர் மலையைக் குடைந்து கால்வாயை வெட்டி வருகிறார். கயா அடுத்த லஹ்துவா மாவட்டம் கோதிவாலா கிராமத்திற்கு நீர் பற்றாக்குறை நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பலரும் வேலைத் தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் லாங்கி பூயான் எனும் நபர் மட்டும் தன்னுடைய கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கு தயக்கம் காட்டியிருக்கிறார்.
மேலும் என்னுடைய கிராமத்திற்கு தேவையான தண்ணீரை மலையில் இருந்து கொண்டு வரமுடியும். நான் எங்கேயும் செல்ல மாட்டேன் எனக் கூறி கடந்த 30 ஆண்டுகளாக மலையைக் குடைந்து கால்வாயை வெட்டி கிராமத்திற்கு நீரைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பீகார் கயா பகுதியில் உள்ள மலையில் இருந்து கோதிவாலா கிராமத்திற்கு கால்வாயை வெட்டும் கடுமையான பணியை மேற்கொண்டு வருகிறார்.
கிராமத்தின்மீதும் பற்றுக் கொண்ட இவரைப் போலவே பீகார் மாநிலத்தில் வேறு ஒரு சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஷ்ரத்மஞ்சி எனும் நபர் தனது மனைவி மலையில் இருந்து விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற காரணத்திற்காக மலையைக் குடைந்து ஒரு தனி பாதையையே கட்டமைத்து இருக்கிறார். இதற்காகத் தனி ஒருவராக இருந்து மலைத் துவாரத்தில் குடைந்து பாதையை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout