பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

இன்று விஷாலின் இரும்புத்திரை, அரவிந்தசாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் நடிகையர் திலகம் ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இந்த படங்களின் புரமோஷன்களும் சிறப்பாக நடந்து வந்தது.

மேலும் நேற்று முன் தினம் முதல் இந்த நான்கு படங்களின் முன்பதிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த வருத்தமான செய்தியை அரவிந்தசாமியும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கான காரணத்தை இதுவரை படக்குழுவினர்கள் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த படத்தை இன்று பார்க்க திட்டமிட்டு முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர் என்பதை டுவிட்டரில் பதிவாகி வரும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்றிரவு சென்னையில் திரையிடப்பட்டு பத்திரிகையாளர்களின் அமோக பாராட்டுக்களை இந்த படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது