டெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரியாணாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் (29), இதுவரையில் 24 சர்வதேச விருதுகளை பேட்மிண்டன் விளையாட்டில் வென்றுள்ளார். லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்ததுடன், 2015ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார்.
இதனையடுத்து பாஜக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2016ஆம் ஆண்டு சாய்னாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித்ஷாவை தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்த சாய்னா, சமீபத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாஜகவில் சாய்னா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற சாய்னா, அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அருன் சிங் முன்னிலையில், தனது சகோதரி சந்த்ரான்ஸ்ஷுவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் அடியெடுத்து வைத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட பலர் அரசியலில் ஏற்கனவே களம் கண்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்து தற்போது டெல்லி எம்.பி.யாக உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments