ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர். இந்தக் காரின் மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று அதிகாலை இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மேலும் ஒருவர் சிகிச்சையின்போது பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
முன்னதாக டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த கடும் பனிப்பெழிவினால் 135 கார்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய சம்பவமும் அமெரிக்காவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மேலும் ஒரு கார் விபத்து நடந்து இருக்கிறது. இந்த விபத்தில் ஒரே காரில் 25 பேர் பயணம் செய்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments