வீட்டில் கோகைன் வைத்திருந்த பிரபல நடிகர் கைது: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,August 29 2021]

வீட்டில் கோகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகரான அர்மான் கோஹ்லி என்பவரது வீட்டில் கோகைன் என்ற போதைப்பொருள் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென நடிகர் அர்மான் கோஹ்லி வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் அவருடைய வீட்டில் சிறிய அளவு கோகைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நடிகர் அம்ரான், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டில் வீட்டில் கோகைன் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, நடிகர் அம்ரான் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் கோஹ்லி மற்றும் நடிகை நிஷி தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.