ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'அஞ்சான்', 'காப்பான்' பட நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,February 13 2022]

சூர்யா நடித்த 'அஞ்சான்’ ’காப்பான்’ ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஒருவர் ஜெயம்ரவியின் ’அகிலன்’ திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்த ’அஞ்சான்’ மற்றும் ’காப்பான்’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் சிராஜ் ஜானி, ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது கேரக்டர் குறித்து கூறுகையில், ‘முதன்முதலாக படம் முழுவதும் தோன்றும் ஒரு காவல்துறை கேரக்டரில் நடிக்கிறேன் என்றும் இந்த கேரக்டர் மிகுந்த சவாலானது என்றும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்றும், இதுவரை கடல் பகுதியை காணாத வகையில் இந்த படத்தில் உள்ள காட்சிகள் பார்வையாளர்களுக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஜெயம் ரவியுடன் தான் நெருங்கி பழகியதாகவும் சிறந்த நண்பர்களாகி விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இவர் ஏற்கனவே ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரியர்’ திரைப் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.