கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

பாலிவுட் சினிமாவில் Big B எனச் செல்லமாக அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது டெல்லியில் உள்ள ஒரு கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதோடு அந்த சிகிச்சை மையத்திற்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டில் இருந்து வரவழைத்துக் கொடுத்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்சிஜன் இல்லாமல் சர் கங்காராம் மருத்துவமனையில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அவலம் ஏற்பட்டது. மேலும் அந்த மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை போன்றவை நிலவுவதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு தேஜ் பகதூர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டில் இருந்து வரவழைத்துக் கொடுத்துள்ளார். முன்னதாக கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் வாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது. இதனால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் விரைவல் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள இவர் அந்த நிகழ்ச்சியிலும் நன்கொடையைக் குறித்து வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நிதியுதவி அளித்ததை அவரது ரசிகர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் பலரும் வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளனர்.