31 நாள் குழந்தையை காப்பாற்ற 518 கிமீ தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்
- IndiaGlitz, [Friday,November 17 2017]
கேரளாவில் 31 நாள் குழந்தை ஒன்றுக்கு உடல்நலமின்றி போகவே உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தை இருப்பதோ கேரளாவின் வடகோடியில் உள்ள கண்ணூர் பரியராம் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில். ஆனால் கேரளாவின் தென்கோடியில் உள்ள திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இடையில் இருப்பதோ 518 கிமீ.
இந்த நிலையில் தமீம் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் குழந்தையையும், அதன் பெற்றோர்களையும் அழைத்து கொண்டு அசாத்திய வேகத்தில் வண்டியை ஓட்டினார். அவருக்கு போக்குவரத்தும் சீர்செய்து தரப்பட்டது.
518 கிமீ தூரத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடந்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் டிரைவர் உதவி செய்துள்ளார். சரியான நேரத்தில் அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் தமீமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.