31 நாள் குழந்தையை காப்பாற்ற 518 கிமீ தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

கேரளாவில் 31 நாள் குழந்தை ஒன்றுக்கு உடல்நலமின்றி போகவே உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தை இருப்பதோ கேரளாவின் வடகோடியில் உள்ள கண்ணூர் பரியராம் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில். ஆனால் கேரளாவின் தென்கோடியில் உள்ள திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இடையில் இருப்பதோ 518 கிமீ.

இந்த நிலையில் தமீம் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் குழந்தையையும், அதன் பெற்றோர்களையும் அழைத்து கொண்டு அசாத்திய வேகத்தில் வண்டியை ஓட்டினார். அவருக்கு போக்குவரத்தும் சீர்செய்து தரப்பட்டது.

518 கிமீ தூரத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடந்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் டிரைவர் உதவி செய்துள்ளார். சரியான நேரத்தில் அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் தமீமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

பரபரப்பை ஏற்படுத்திய பாலாவின் 'அந்த' ஒரே ஒரு வார்த்தை

இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.

20 ஆண்டுகள் ஆனாலும் விஸ்வரூபம் 2' வெளிவராது: எச்.ராஜா

உலக நாயகன் கமல்ஹாசன் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து பொதுப்பணியில் இறங்கவுள்ள நிலையில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகிறது.

வேலைக்காரன் படத்தில் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் படக்குழு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விருந்தாக வெளிவரவுள்ள

ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கைக்காக கமல்ஹாசன் செய்த நிதியுதவி

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்டு பல்கலையில் இருக்கை இல்லை என்ற நிலையில் தற்போது இந்த இருக்கையை பெற உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

தளபதி 'மெர்சல்' செய்த மேலும் ஒரு சாதனை

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்னரும் சந்தித்து சாதனை வசூல் பெற்று இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம்