மீண்டும் துவங்கிய ஆல்பாஸ்… பஞ்சாப் மாநிலத்தின் முதல் அறிவிப்பு!
- IndiaGlitz, [Thursday,April 15 2021]
கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் ரிவல்டை வெளியிட்டு இருந்தன. இந்நிலையில் கடந்த வருடம் துவங்கிய கொரோனா பாதிப்பு அலை தற்போது இந்தியாவில் 2 ஆம் முறையாக வேகம் எடுத்து தீவிரம் பெற்று வருகிறது.
தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,00,739 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் உயிரிழப்பு 1,038 ஆக அதிகரித்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,72,123 எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி ஆல்பாஸ் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், கொரோனா அதிகரித்து வருவதால் 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்படுகிறார்கள். 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு சூழ்நிலையைப் பொறுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். தமிழகத்திலும் இதுபோன்ற நிலைமை ஏற்படுமா என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.