டாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

 

நாட்டின் டாப் 10 காவல் நிலையப் பட்டியலில் சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் காவல் நிலையம் 2 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறது. இதனால் அங்குள்ள அதிகாரிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் சிறந்த டாப் 10 காவல் நிலையப் பட்டியலை மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் நகரில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையம் முதல் இடத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து சேலம் பகுதியில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

இந்தப் பட்டியலில் அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் நகரில் உள்ள கர்சாங்காவல் நிலையம் 3 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது. தமிழ்நாட்டு போலீஸ்க்கு எப்போதும் தனி மவுசு இருப்பதைப் போலவே நாட்டின் சிறந்த 2 ஆவது காவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் பகுதி காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது சிறப்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.