அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கு சாம் சி.எஸ். இசையா?

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிவா, இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பிசியில் உள்ளார். இந்த நிலையில் இந்த  படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்றும், அனிருத் இசையமைப்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் சிம்பு இசையமைக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான 'விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ், விசுவாசம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சாம் சி.எஸ் மறுக்கவில்லை. இதுகுறித்து சாம் சி.எஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இந்த படத்திற்கு நான் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்படுவேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் ஒரு மிகப்பெரிய தல ரசிகர். இந்த படத்திற்கு இல்லாவிட்டாலும் விரைவில் தல அஜித் படத்திற்கு இசையமைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

'விசுவாசம்' படத்திற்கு வித்தியாசமான புதிய இசை வடிவம் தேவை என்பதால் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்

More News

பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பேராசிரியர்: காட்டி கொடுத்த சிசிடிவி

உடல்நிலை சரியில்லாத பெற்ற தாயை அவரது மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.

மலேசியன் பிரதமருடன் ரஜினி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் நாளை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார். அவருக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு: பேருந்தை இயக்கி அசத்திய அந்தியூர் எம்.எல்.ஏ

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பானது: ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அவரது ரசிகர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு வேலை பாருங்கள்! பஸ் ஊழியர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் திருப்தியாக இல்லை என்று கருதினால் வேறு வேலை பார்த்து கொள்ளவும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி