முடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்?

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் திடீரென இந்திய விமானப்படையின் தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய விமானப் படையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

அனேகமாக ’சூரரை போற்று’ படம் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தீபாவளி அன்று நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சூரரை போற்று’ படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக மோஷன் போஸ்டர், அதனை அடுத்து ட்ரைலர், அதன் பின்னர் இரண்டு புதிய பாடல்கள் ரிலீஸ் என புரோமோஷன் திட்டங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’சூரரை போற்று’ திரைப்படம் தீபாவளி அன்று வெளிவந்தால் சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது