உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் அதன் மூலம் புதிய தொழில் திட்டங்களை மேம்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். அது மக்கள் மத்தியில் கடும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க “யாதும் ஊரே குளோபல் Conclave” என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.
இதில் அமெரிக்காவின் சில்கான் பள்ளத்தாக்கிலுள்ள தமிழர்கள் முதற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். மேலும் 3 நாட்கள் நடைபெற இருக்கும் Virtual Enclave மூலம் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டம் (ATEA) முதன் முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்தோரால் உருவாக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ATEA யின் இணை நிறுவனர் லீனா கண்ணப்பன் பிரபல பத்திரிக்கையிடம் “அமெரிக்க புலம்பெயர்ந்தோரிடம் இருந்து மாநிலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியிருந்தார்.
தொடக்கக் காலத்தில் ATEA அமைப்பானது சுற்றுச்சுழல் சார்ந்த விஷயங்களை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் அமெரிக்காவில் முக்கிய பங்காற்றியது. அவர்களின் ஈடுபாட்டில் வணிக பேனல்களுக்கான பேச்சாளர்களின் அழைப்பு மற்றும் உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அறைகளுடன் ஒருங்கிணைப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. இந்த குளோபல் கான்க்ளேவுடன் இணைந்து ATEA டிஜிட்டல் முடுக்கி மற்றும் ATEA Mentor connect என இரு முக்கிய திட்டங்களை வலுப்படுத்துகிறது.
பெரும்பான்மையான தொழில் முனைவோர் 2 நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு தங்கள் முயற்சிகளைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும் லீனா கூறுகிறார். ஸ்ரீவாரு மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட் சான் ஜோஸில் ஸ்டார்ட் –அப்களில் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே ரூபாய் 150 கோடி முதலீடு செய்துள்ளது. இ-பைக்குகளை தயாரிக்கும் இந்த திட்டத்தின் மூலம் 2000 பேர்களுக்கு வேலை கிடைக்கும்.
இந்நிறுவனம் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. மற்ற முக்கிய முதலீடு அமெரிக்காவை மையமாகக் கொண்ட கிளவுட் என்பேலர்களிடமிருந்து எண்டர் பிரைஸ் கிளவுட் திட்டத்திற்கான தன்னாட்சி மற்றும் தொடர்ச்சியான நிர்வாகத்தை சென்னையில் ரூ.35 கோடி முதலீட்டில் நிறுவ முன்வந்துள்ளது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் “தமிழ் புலம்பெயர்ந்தோருடன் கூட்டணியை மறுவரையறை செய்தல்” இந்நிகழ்ச்சி நாடுகளில் உள்ள தமிழ் சகோதரத்துவ உணர்வைக் கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய கொண்டாட்டத்தில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச எக்ஸ்போ உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும். இது தான் யாதும் ஊரே திட்டமாகும்.
தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சபையின் தலைவர் ஆர்.ஆர்.எம். அருண் பிரபல பத்திரிகையிடம் கூறும்போது, இந்த மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைப்பார் எனக் கூறினார். மேலும் நாங்கள் 400 தமிழ் சங்கங்களை அடைந்துள்ளோம். சுமார் 5,000 முதல் 10,000 பிரதிநிதிகள் பங்கேற்பதை எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு ஆண்டு இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments