தமிழ் பெண்ணின் மாஸ்க் ஸ்டைல பாருங்க… இளம் நடிகையின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் ஆஸ்தான நடிகரான கமல்ஹாசனின் மூத்தமகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதோடு சிறந்த பாடகி மற்றும் இசையமைப்புகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதியோடு இணைந்து “லாபம்” திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தெலுங்கின் மாஸ் நடிகர் பிரபாஸ்ஸுடன் இணைந்து “சல்லார்” எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அரசியல் நிரூபராக நடிக்கும் இவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டது எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது. தெலுங்கு, கன்னடத்தில் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
இப்படி மாஸ் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாவில் 16 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட இவர் தற்போது கொரோனா நேரத்தில் மாலத்தீவுக்கு சென்று சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்கள் பதிவிடும் பிரபலங்களைச் சாடியிருந்தார். அதோடு கொரோனா நேரத்தில் பிரபலங்கள் பலரும் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளை பதிவிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments