செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த ‘சிட்டாடல்‘ டீம்… வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆகியோர் இணைந்து தற்போது இந்தி ‘சிட்டாடல்’ வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்தப் படக்குழுவினர் செர்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆங்கிலத்தில் ரூஸ்ஸோ சகோதரர்களான ஜோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ ஆகியோர் இயக்கத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் டேன் ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான ‘சிட்டாடல்’ வெப் தொடர் தற்போது உலகம் முழுக்கவே பிரபலமாகி இருக்கிறது. அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் இந்த வெப் தொடர்ந்த இந்தியா, மெக்சிகோ, மற்றும் இத்தாலியில் உருவாக்க இருக்கிறது.
இந்நிலையில் இந்திய மொழிகளுக்கான ‘சிட்டாடல்’ வெப் தொடரை ‘தி ஃபேமிலி மேன்‘ வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். இந்த தொடர் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்த ‘சிட்டாடல்’ தொடருக்கு முந்தைய நிகழ்வாக உருவாக இருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘சிட்டாடல்’ வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அந்தப் படக்குழுவினர் செர்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் ‘செர்பியாவில் இந்திய ஜனாதிபதியை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் அணிக்கு கிடைத்ததை கவுரவமாக நினைக்கிறோம்‘ என்றும் கூறிய நிலையில் நடிகை சமந்தா ‘மேடம் பிரசிடெண்ட்’ என்று க்யூட்டாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout