நெட்டிசன்களிடம் நடிகை ராஷ்மிகா எழுப்பிய ஒரு கேள்வி… குவியும் கமெண்ட்டுகள்!

தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா. “க்ரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “கீதா கோவிந்தம்“ திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். அதிலும் குறிப்பாக இளம் ரசிகர்களை அதிகளவு பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார்.

இவர் தற்போது நடிகர் கார்த்திக் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான “சுல்தான்“ திரைப்படத்தின் மூலம் தமிழிலிலும் அறிமுகமாகி இருக்கிறார். அதேபோல இந்தியில் “மிஷன் மஜ்னு”, “குட்பை ” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகை ராஷ்மிகா “எந்த மனநிலை வேண்டும்“ என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகை ராஷ்மிகாவின் விதவிதமான ரியாக்ஷன்கள் இடம் பிடித்து இருக்கின்றன. இதைப் பார்த்த நமது நெட்டிசன்கள் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி தெளித்து இருப்பதோடு தங்களது கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் 15 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டு இருக்கும் இவரின் ஒற்றைப் புகைப்படத்திற்கு இதுவரை 31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.