கணவருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜய் பட நாயகி... வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அழகி பட்டம் வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா முதன் முதலில் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் எனத் தற்போது ரவுண்டு கட்டி கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
நடிப்புத் துறையைத் தவிர இவர் தற்போது ஹோட்டல் தொழிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வகையில் நியூயார்க்கில் சோனா என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கி இருக்கும் நடிகை பிரியங்கா தனது திரையுலக அனுபவம் குறித்து சுயசரிதை ஒன்றை எழுதியும் வெளியிட்டு உள்ளார். அந்த சுயசரிதையில் வெளியுலகிற்கு தெரியாத பல விஷயங்கள் இடம் பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா தற்போது தனது கணவர் நிக் ஜோனாசுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷுட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் ரசிகர்களை கிறங்க வைக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கணவருடன் நின்று கொண்டு கவர்ச்சியாக நடிகை பிரியங்கா கொடுத்துள்ள போஸ் தற்போது நெட்டிசன்களிடம் பலத்த வரவேற்பை பெற்று இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments