சினிமாவில் எண்ட்ரியா? நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் அக்கா பற்றிய வைரல் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,November 11 2021]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதோடு இளம் வயதிலேயே தேசிய விருதை பெற்ற நடிகையான இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இவருடைய குடும்பமே சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தது என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா பிரபல மாலையாள பட தயாரிப்பாளர். இவருடைய அம்மா மேனகா, மம்முட்டி, ரஜினிகாந்த் எனப்பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்ஷூம் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி குடும்பமே சினிமா வசானையோடு இருக்கும்பட்சத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் அக்கா ரேவதியும் தற்போது தயாரிப்பாளராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்காக தன்னுடைய அப்பா சுரேஷ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனமான கலாமந்திர் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படமொன்றை ரேவதி தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வாஷி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தங்கை நடிக்கும் படத்தை, அக்கா ரேவதி தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்பு தனது அப்பா சுரேஷ்ஷின் தயாரிப்பு நிறுவனமான கலாமந்திர் தயாரித்த 3 படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் சொந்த அக்கா ரேவதி தயாரிக்கும் படத்தில் தற்போது முதல் முறையாக ஹீரோயினாக நடிக்க இருப்பதும் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
 

More News

எல்லார் மனசிலயும் ஒரு காதல் இருக்கும்: அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' டீசர்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது.

சிபிராஜின் 'மாயோன்' ரிலீஸ் தேதி இதுவா? வெளியான சூப்பர் தகவல்

சிபிராஜ் நடித்த 'மாயோன்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென பாதை மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு ஆபத்தா?

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மாறவுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதையை

இந்த விளையாட்டுல என்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது: 'சபாபதி' டிரைலர்

சந்தானம் நடித்த 'சபாபதி' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மலாலாவிற்கு திருமணம்… கணவர் யார் தெரியுமா?

பெண்கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யூசுப்சாய் கடந்த 2012