என்னை இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். நடிகை ஹனிரோஸ் வைத்த திடுக் குற்றச்சாட்டு..!
- IndiaGlitz, [Sunday,January 05 2025]
நடிகை ஹனிரோஸ் பொது நிகழ்ச்சிகளில் தன்னை இரட்டை அர்த்தத்துடன் ஒருவர் பேசுகிறார் என கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் செல்லும் நிகழ்ச்சிகளில், ஒரு நபர் வேண்டுமென்றே வந்து பேசுகிறார். பெண்மையை அவமானப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு ஊடகங்களில் வெளியாகிறது. இரட்டை அர்த்த வார்த்தைகளால் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். இனியும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன்.
அந்த நபர், தன்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும், ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் விதமாக அவர் செயல்படுவதாகவும் கூறினார்.மேலும் இந்த நபரின் செயல்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனை உள்ளது. அவரை எதிர்க்கும் திறன் எனக்கு இல்லை என்று யாரும் எண்ண வேண்டாம். அவரை மனநிலை சரியில்லாதவர் என்று நினைத்து புறக்கணித்தேன். ஆனால், இனி நான் அமைதியாக இருக்க மாட்டேன். என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து, ஹனிரோஸ் குறிப்பிட்ட அந்த நபர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.