மணப்பெண் இவர்தான், விரைவில் திருமண தேதி: விஷ்ணு விஷால் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,March 22 2021]

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இருவரும் கல்லூரி கால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிகளுக்கு ஆரியன் என்ற மகன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை விஷ்ணுவிஷால் காதலித்து வருவதாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என்றும் திருமண தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய ’காடன்’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிக்டாக்,வாட்ஸ்அப் கட்டுப்பாடுகள்,என் வளர்ச்சியை தடுக்கவே...! சீமான் காரசாரப் பேட்டி..!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன்னுடைய வளர்ச்சியை குறைப்பதற்காகவே,

தனுஷின் 'கர்ணன்' டீசர் குறித்து எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை பார்த்தோம்

முன்னணி தொழில் அதிபரின் அசால்ட் சேலஞ்சால்… வைரலாகும் அக்சர் படேல் சன் கிளாஸ்?

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக இருந்து வரும் மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா வித்தியாசமான ஒரு சேலஞ்சை நெட்டிசன்களிடம் விடுத்து

சின்னம் ஒதுக்காததால் சுமையில் விடுதலை சிறுத்தைகள்...! கவலையில் திமுக...!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்னமும் சின்னம் ஒதுக்காததால், அக்கட்சியினர்  மத்தியில் மத்தியில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது. 

அண்ணன் திமுக, தம்பி அதிமுக...! களைகட்டும் ஆண்டிப்பட்டி  தொகுதி..!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பாக லோகிராஜனும், திமுக சார்பாக மகராஜனும் போட்டியிடுகிறார்கள்