நடந்து சென்ற விக்ரம் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு: என்ன பிரச்சனை?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தல அஜித், தளபதி விஜய், நடிகர் சூர்யா, அருண்விஜய் உள்பட பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே
இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்து சென்றார். அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது அந்த வாக்குப்பதிவு மையத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து விக்ரம் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்தவுடன் நடிகர் விக்ரம் வாக்களித்துவிட்டு வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது
இன்று தளபதி விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் நடிகர் விக்ரம் தனது வீட்டிலிருந்து நடந்தே வாக்களிக்க சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#ELECTIONBREAKING | பெசன்ட்நகர் வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே வந்து வாக்களித்தார் நடிகர் விக்ரம்#SunNews | #TNElection #TNAssemblyElection2021 | #Vikram pic.twitter.com/8REfLZmvtd
— Sun News (@sunnewstamil) April 6, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments