நடந்து சென்ற விக்ரம் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு: என்ன பிரச்சனை?

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தல அஜித், தளபதி விஜய், நடிகர் சூர்யா, அருண்விஜய் உள்பட பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்து சென்றார். அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது அந்த வாக்குப்பதிவு மையத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து விக்ரம் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்தவுடன் நடிகர் விக்ரம் வாக்களித்துவிட்டு வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது

இன்று தளபதி விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் நடிகர் விக்ரம் தனது வீட்டிலிருந்து நடந்தே வாக்களிக்க சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சைக்கிளில் வந்து வாக்களித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், நடிகர் சூர்யா கார்த்தி உள்பட பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

செல்பி எடுத்த நபரின் போனை பிடுங்கிய அஜித்: வைரல் வீடியோ

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் 6.30 மணிக்கே திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து விட்டார்

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித், சூர்யா வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

'குக் வித் கோமாளி' வின்னர் யார்? ரன்னர்கள் யார் யார்?

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு....! திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...?

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் திமுக கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.