மாரி-2 படத்தின் வில்லன் டொவினோ தாமஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மாரி-2. இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்து இருந்தார். ஏற்கனவே தமிழில் “அபியும் அனுவும்” படத்தில் நடித்த இவர் மாரி-2 படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான டொவினோ ““என்னு நின்டே மொய்தீன்”, “லூசிஃபர்” போன்ற படங்களில் நடிப்புக்காக ஏராளமான ரசிகர்களை பெற்று இருக்கிறார். அவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டொவினோ வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால் எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலே தொற்று உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் மாதவன், அமீர்கான், நகைச்சுவை நடிகர் செந்தில் போன்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு எற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்ஸுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Hello. As it turns out, I've been tested positive for Covid and is currently in isolation. It was an asymptomatic case, I'm fine and well. So it's been quarantine time for a couple of days now.A few more days to look forward & long about returning to action & entertaining you all pic.twitter.com/0rFKNg15AF
— Tovino Thomas (@ttovino) April 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments